Spotlightசினிமா

👶 நடிகர் கவின் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி… ஆண், பெண் குழந்தைகளை வரவேற்ற தம்பதியினர்!

சென்னை: தமிழ் திரையுலகின் இளம் நடிகரான கவின் மற்றும் அவரது மனைவி மோனிகா டேவிட் தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

தம்பதியினர் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்த இனிய செய்தி வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கவின், பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கடந்த ஆண்டு மோனிகா டேவிடை திருமணம் செய்து கொண்ட கவினுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அவரது குடும்பத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக பெற்றோர்களாகியுள்ள கவின் – மோனிகா டேவிட் தம்பதியினருக்கும், புதிதாக பிறந்துள்ள இரு குழந்தைகளுக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் கவின் கூறியுள்ளதாவது, “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. ங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். ” என்று கூறியுள்ளார். 

Facebook Comments

Related Articles

Back to top button