Spotlightசினிமா

ஆறு கண்களும் ஒரே பார்வை – விமர்சனம்

தை – திரைக்கதை – வசனம் – தயாரிப்பு – இயக்கம் : ஜடையனூர் வி ஜானகிராமன்

நடிகர்கள்: ராஜ்நிதன், கெனி, வாசுவிக்ரம், கும்கி ஆனந்தி, ஆதவன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

கதையின் நாயகனாக வருகிறார் ராஜ்நிதன். தனது அப்பா – அம்மா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொள் என்று பெற்றோர்கள் கூறியதையடுத்து நாயகி கெனியை காண்கிறார் ராஜ்நிதன்.

கெனியை கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார் ராஜ்நிதன். கெனியிடம் காதலை கூறுகிறார் ராஜ்நிதன். அவரது காதலை நிராகரிக்கிறார் கெனி.

அதேநாளில் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு பேர் காதலை கூற, அவர்களின் காதலையும் நிராகரித்து விடுகிறார்.

இந்நிலையில், தனது தாயின் ஆப்ரேஷனுக்காக மூன்று லட்சம் ரூபாய் தேவைப்பட, அதற்காக காதலிப்பதாக கூறிய மூவரிடமும் தலா ஒரு லட்சம் ரூபாயை வாங்குகிறார். பணம் கொடுத்தால் மட்டுமே காதலிப்பேன் என்றும் கூறி விடுகிறார்.,

மூன்று லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தனது தாயின் ஆப்ரேஷனை முடித்துவிடுகிறார் கெனி. கெனி மூன்று இளைஞர்களை ஏமாற்றியதை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது தாய், மூவரையும் நேரில் அழைக்கிறார்.

நடந்தவற்றைக் கூறி மன்னிப்பு கேட்கிறார் கெனியின் தாய். தொடர்ந்து, மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள் என்று கூற, கெனி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். மேலும், ஆண்களை கண்டாலே வெறுப்பு தான் வருகிறது என்றும் கூறுகிறார்.

எதற்காக ஆண்களை கண்டால் கெனி வெறுக்கிறார்.? கெனிக்கு திருமணம் நடந்ததா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ராஜ்நிதன் கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். பெற்றோரிடத்தில் அன்பு காட்டும் இடத்திலும், தனது காதலை நினைத்து ஏங்கும் இடத்திலும் நான்றாகவே தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் ராஜ்நிதன்.

கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக அளந்து கொடுத்திருக்கிறார் நாயகி கெனி. ஆண்களை வெறுப்பதற்கு என்னதான் காரணம் என்பதற்கான விளக்கம் வலுவானது.

இரண்டாம் பாதியில் பல இடங்களில் இரண்டாம் நாயகியாக படத்திற்கு வலு சேர்த்து தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆனந்தி. தனது கணவனை இழந்து அழும் இடமாக இருக்கட்டும், ஆண் இல்லாத வீட்டில் ஒரு பெண் படும் இன்னல்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் ஆனந்தி.

மேலும், படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் இன்னும் சற்று கூடுதலாக கவனம் கொடுத்திருந்திருக்கலாம். ஒளிப்பதிவு வெளிச்சத்தை அளவாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.

மிக ஆழமான கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் இடத்தில் ஆங்காங்கே கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Facebook Comments

Related Articles

Back to top button