Spotlightசினிமா

வசூல் வேட்டையில் “கருப்பு”… மகிழ்ச்சியில் கார்களை பரிசளித்த சூர்யா!

மாபெரும் வெற்றியை கொண்டாடிய சூர்யா… இசையமைப்பாளர் சாய் அபயங்கர், எடிட்டர் கலைவாணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு  விலையுயர்ந்த கார்களை பரிசளித்தார்!.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான “கருப்பு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் இந்த திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தின் வெற்றிக்காக உழைத்த முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசுகளை வழங்கியுள்ளார். அதன்படி, “கருப்பு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், எடிட்டர் கலைவாணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோருக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

திரைப்படத்தின் வெற்றியில் இசையும், ஒளிப்பதிவும் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படும் நிலையில், அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சூர்யாவின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

“கருப்பு” திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் கதை, திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் சூர்யாவின் நடிப்பு ஆகியவை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளை குவித்து வருகின்றன.

திரைப்பட வெற்றியை தனிப்பட்ட சாதனையாக பார்க்காமல், படக்குழுவின் கூட்டு உழைப்புக்கான அங்கீகாரமாக கொண்டாடும் சூர்யாவின் இந்த நடவடிக்கை, தமிழ் திரையுலகில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button