
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனது அடுத்த திரைப்படமாக “மஞ்சணத்தி” என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதுமே திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சமூக அரசியல் கருத்துக்களை வலுவாகப் பேசும் கதைகளின் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்”, வாழை உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு புதிய களத்தில் “மஞ்சணத்தி” திரைப்படத்தை உருவாக்க உள்ளார். இந்த படம் கிராமிய பின்னணி, மனித உணர்வுகள் மற்றும் சமூக வாழ்வியலை மையமாகக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இசைஞானி இளையராஜா இசையமைப்பது பார்க்கப்படுகிறது. பல தலைமுறைகளாக ரசிகர்களின் இதயத்தை ஆட்கொண்ட இளையராஜாவின் இசையும், மாரி செல்வராஜின் கதை சொல்லும் பாணியும் இணைவது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
“மஞ்சணத்தி” என்ற தலைப்பே கிராமிய மண்வாசனையையும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனால் படம் எந்த மாதிரியான கதையை சொல்லப் போகிறது என்ற ஆர்வம் தற்போது சமூக வலைத்தளங்களில்
படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் இசையும், மாரி செல்வராஜின் இயக்கமும் இணையும் இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் மற்றொரு தரமான படைப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவுகிறது.
“மஞ்சணத்தி” திரைப்படம் குறித்த மேலும் பல அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.





