விமர்சனங்கள்

ஆர்யமாலா – விமர்சனம் 2.5/5

திரைக்கதை, வசனம் மற்றும் இணை இயக்கம் செய்திருக்கும் R.S. விஜய பாலா உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஆர்யமாலா.

ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் ,சிவசங்கர் ,ஜேம்ஸ் யுவன் ,தவசி ,மணிமேகலை ,ஜாபர் ,வேல்முருகன் ,மாரிமுத்து இவர்கள் தங்களது நடிப்பைக் கொடுத்து ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்து செல்வநம்பி இசையமைத்திருக்கும் படம் இதுவாகும்.

இப்படத்தை வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்) தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் பயணிக்கலாம்…

ஒரு கிராமத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. நாயகியாக வரும் மனிஷாஜித், பருவ வயதை எட்டியபிறகும் பூப்படையாமல் இருக்கிறார்.

கிராமம் என்பதால், இதை பெரிய குறையாக அனைவரும் கூறி வருகின்றனர். மனிஷாவின் தாய், தந்தை மனிஷாவை நினைத்து கவலையடைகின்றனர்.

இச்சமயத்தில், மனிஷாவின் தங்கை பூப்படைய, மனிஷாவை இன்னும் அதிகமாகவே மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர் சிலர்.

இந்நிலையில், கனவில் நாயகன் ஆர் எஸ் கார்த்திக்கைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒருநாள், கனவில் வந்த நாயகனை கண்முன்னே காண்கிறார் மனிஷா.

அதன்பிறகு கதையில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.,

நாயகன் ஆர் எஸ் கார்த்திக் கூத்து கட்டும் கலைஞனாக வருகிறார். வேடம் அணிந்து கதாபாத்திரமாக மாறும் இடத்தில் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், மொத்த கதையையும் தாங்கிச் செல்கிறார். இவர் மீதே தான் மொத்த கதையும் பயணிக்கிறது. பூப்படையாததை எண்ணி கலங்கும் காட்சிகளில் நம் கண்களையும் கலங்கடித்து விடுகிறார் மனிஷாஜித். காதல் காட்சிகளில் பரவசமூட்டுகிறார்.

மற்ற கதாபாத்திரமும் படத்திற்கு என்ன தேவையோ அதை இயல்பாக கொடுத்திருக்கிறார்கள்.

பாடல்கள் அதிகம் இருப்பதால், கதையில் ஆங்காங்கே இடையூறு ஏற்பட வைக்கிறது.

திரைக்கதையில் இன்னும் பெரிதாக மெனக்கெடல் செய்திருக்கலாம். பின்னணி இசை ரகம் தான்.

ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே வெளிச்சம் கொடுத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button