Spotlightசினிமா

”டாக்டர்” வெற்றி பெற சூர்யா, ஆர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாழ்த்து!!

கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “டாக்டர்”.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்தினை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிட்டியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் படம் இன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மக்களிடையே பாஸிடிவான ரிப்போர்ட் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், படம் மாபெரும் வெற்றி பெற நாயகன் சிவகார்த்திகேயனுக்கு பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா, ஆர்யா மற்றும் இயக்குனர்கள் அருண்ராஜா காம்ராஜ், ரத்தினகுமார் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை சிவகார்த்திகேயனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button