Spotlightசினிமா

மே 1 முதல் ரீ ரிலீஸாகும் அஜித்தின் “வீரம்”

டிகர் அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1 அன்று, அவர் நடித்து வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த வீரம் படம் ரீ ரிலீஸாக இருக்கிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தினை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு.

அதன்படி, இப்படத்தினை வரும் 1 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர இருக்கிறார்கள். ஏற்கனவே, திரையரங்குகளில் அஜித் நடித்து வெளியான “குட் பேக் அக்லி” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படமும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா ட்ரீட்டாக அமையவிருக்கிறது.

அரவிந்த் சுரேஷ்குமார் இப்படத்தினை உலகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யவிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button