
ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் (Black, Piku), ஆயுஷ்மான் ரானா (Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun) ஆகிமயார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அமேசான் பிரம் வீடியோவில் வரும் ஜுன் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
உலகம் முழுவதிலும் சுமார் 200 நாடுகளில் இந்த படத்தினை கண்டு களிக்கலாம் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது இப்படம்.
இது, மிகவும் நகைச்சுவையாக மனதை நெகிழ வைக்கக் கூடிய கதையம்சத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது.
குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இது நிச்சயம் இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகிய இருவரும் இப்படத்தில் தந்திரமான நபர்கள், தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று மேற்கொள்ளும் போட்டியில், பிறரை தங்கள் பக்கம் இழுத்து, தத்தமது நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நகைச்சுவை ததும்பும் தருணங்களை உள்ள்டக்கிய படம் இதுவாகும்’ என்று கூறியுள்ளார்.





