சினிமா

உயரத்தை தொட்ட பிறகும் அடக்கமாக இருப்பவர் விஜய் ஆண்டனி – அம்ரிதா!

 

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ளது ‘காளி’. இப்படம் வரும் 18 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் நடித்தது குறித்து பேசிய அம்ரிதா, ‘விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button