சினிமா

விஜய் சேதுபதி – அஞ்சலி ரொமண்ஸ்… விரைவில் படப்பிடிப்பில்!

விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கினார் அருண்குமார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘இறைவி’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. ‘மேயாத மான்’ படத்தில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த விவேக் பிரசன்னா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வருகிற 25-ம் தேதி, தென்காசியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

அதன்பிறகு, மலேசியாவில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button