Spotlightசினிமா

பல தடைகளை தாண்டி தான் மிஷன் படத்தினை எடுத்தோம் – இயக்குனர் விஜய்

விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்‌ஷன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் மிஷன் சாப்டர்1. பொங்கல் வெளியீடாக வரும் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

படத்தினை பற்றி இயக்குனர் விஜய் கூறும் போது, “ மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. படம் உருவாகக் காரணமாக இருந்த ராஜசேகர் சாருக்கு நன்றி. லைகா உள்ளே வந்ததும் படம் இன்னும் பெரிதானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் எனச் சொல்லி ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றினார்கள்.

அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. இந்தப் படம் எமோஷனலாக எனக்கு முக்கியமானது. சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. ‘மிஷன் சாப்டர்1’ படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை.

பின்புதான் சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது. இயலும் ஜிவி பிரகாஷூம் இந்தப் படத்தின் ஆன்மா. இயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தைத் தாண்டி எனக்கும் ஜிவிக்கும் நல்ல நட்பு உள்ளது.

என் மொத்தக் குழுவுக்கும் நன்றி. பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ என பொங்கலுக்கு வரும் எல்லாப் படங்களும் வெற்றிப் பெற வேண்டும்”. என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button