தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளில் வில்லியாக நடித்த ஒரு சிலரை ரசிகர்களால் மறக்கவே இயலாது. அப்படி வில்லியாக அசத்தி இப்போதும் ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர் ராணி. இவர் நீதிமன்றம் ப்ரான்க் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது வரவேற்பதாகவும், அப்படி ஒரு ஷோவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மோசமான சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அவர், ஒரு சீரியல் படப்பிடிப்பில் மதிய உணவு சாப்பிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தேன், அப்போது ஒருவர் எனது கையொப்பம் வேண்டும் என்று கேட்டார், நானும் போட்டு கொடுத்தேன் . பிறகு புகைப்படம் எடுக்க கேட்டார் ஒப்புக்கொண்டேன், அவர் அந்த நேரத்தில் என் பக்கத்தில் வந்து கொஞ்சம் மோசமாக உரசி புகைப்படம் எடுத்தார்.
அதன் பிறகும் அவர் செல்லவில்லை என்னதான் வேண்டும் என்று கேட்டால் நீதான் வேண்டும் என்றார், அப்படியே அதிர்ந்து பதறி விட்டேன்.
உடனே காதுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக கத்தினார், அந்த நொடி என்னால் மறக்கவே முடியாது. அவர் கத்தியதால் எனது காது சரியாக கேட்கவில்லை, அவர் செய்த காரியத்தால் இரண்டு நாள் பேச்சே வரவில்லை, மருத்துவமனையில் 1 வாரம் சிகிச்சை பெற்றேன் இந்த சம்பவத்தால், நான் பட்ட அத்தனை கஷ்டத்துக்கு பின்பு தான் தெரிகிறது, அவர்கள் என்னிடம் அப்படி செய்ததற்கு பின் பிரான்க் ஷோ ஒன்று இடம்பெற்றுள்ளது என்று .அதன் காரணமாக தான் பிரான்க் ஷோ செய்ய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது ஆறுதல் கொடுக்கிறது .