
அறிமுக இயக்குனர் ஹென்றி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் மாணவன். இப்படத்தில் கதிர், மாஸ்டர் மகேந்திரன், கரு பழனியப்பன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீதர்.
படத்தின் பூஜையின் போது தலைப்பு முதலில் இயல்வது கரவேல் என வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாணவன் என்று வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வருட வெளியீடாக படம் திரைக்கு வரும் என படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் அரசியலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறதாம். மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
Facebook Comments





