விமர்சனங்கள்

பன் பட்டர் ஜாம் விமர்சனம்

ராகவ் மிர்தா அவர்களின் இயக்கத்தில் ராஜு, பவ்யா ட்ரிகா, ஆதியா, விஜே பப்பு, விக்ராந்த், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பன் பட்டர் ஜாம்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே.பிரசன்னா. மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாலுகுமார்.ஐ.இ. தயாரித்திருக்கிறது ரைன் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

கல்லூரி வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்கிறது ராஜூவின் பயணம். கல்லூரி தோழியான பவ்யாவை காதலிக்கிறார் ராஜூ. அவரையே திருமணம் செய்து கொள்ளவும் நினைக்கிறார். ஆனால், ராஜூவின் தாயாக வரும் சரண்யா பொன்வண்ணன், ராஜூவிற்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆதியாவிற்கும் திருமணம் செய்து வைக்க ப்ளான் செய்கிறார்.

ஆனால், ஆதியா விஜே பப்புவை காதலிக்கிறார். இந்நிலையில், ராஜூவின் நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜுவிடம் இருந்து விலகிச் செல்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ராஜுவின் காதல் ஜெயித்ததா ? என்பதை தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள், காதல், நட்பு ஆகியவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், என்ற கோணத்தில் சொல்வது தான் ‘பன் பட்டர் ஜாம்’.

கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் நாயகன் ராஜூ. கதாபாத்திரத்தோடு மிகவும் ஒன்று எதார்த்த நடிப்பைக் கொடுத்திருக்கிரார். ஆனாலும், கதையின் ஓட்டத்தில் அவரது கதாபாத்திரம் ஆங்காங்கே காணாமல் போனது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா அழகிலும், நடன அசைவுகளிலும் கவனம் ஈர்ப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பவ்யாவுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கும் மற்றொரு நாயகி ஆதியா தனது துறுதுறு நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார்.

மைக்கேல்,, வி ஜே பப்பு, சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி உள்ளிட்ட நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்தாலும், அவர்கள் வழக்கமாக செய்வதை கொஞ்சம் ஓவராக செய்து பார்வையாளர்களை சற்று சலிப்படைய வைத்துவிடுகிறார்கள்.

நிவாஸ் கே பிரன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாபு குமார்.ஐ.இ, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நிகழ்காலத்தில் இளைஞர்களின் காதல், நட்பு, கலாட்டா என அனைத்தையும் மிகவும் கலகலப்போடு கையாண்டு அதை நேர்த்தியாக படைத்திருக்கிறார் இயக்குனர்.

சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் இப்படம் ஒரு தனித்துவமான படமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

பன் பட்டர் ஜாம் – கலகலப்பு

Facebook Comments

Related Articles

Back to top button