தமிழ்நாடு

ஆளுநரை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு!

சென்னை: ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தி ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் காவேரிக்காக தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ்வரன் இறந்த இடமான எழும்பூர் ஆல்ப்ரட் திரையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button