Spotlightசினிமாவிமர்சனங்கள்

800 – விமர்சனம் 3.25/5

எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், நாசர், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், ரித்விக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “800”. பிரபல கிரிக்கெட் பவுலர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்திருக்கிறார்கள்.

கதைப்படி,

தேயிலை தொழில் வேலைக்காக தமிழகத்தில் இருந்து தொழிலாளியாக இலங்கைக்கு பயணப்படுகிறது முரளிதரனின் குடும்பம். பல வருடங்களாக தனது குடும்பமாக அங்கு தங்கி வருகின்றனர்.

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் அதிக நாட்டம் உடையவராக இருக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). பவுலிங்கில் அதிக திறமை படைத்தவராக இருக்கிறார் முரளிதரன். ஆஸ்திரேலிய அணி ஸ்பின் பவுலிங்கில் மற்ற அணிகளை துவம்சம் செய்து கொண்டிருந்த நேரத்தில் நமக்கு சரியான ஸ்பின் பவுலிங் ஆள் இல்லையா என்று இலங்கை அணி கவலை கொண்டிருந்த நேரத்தில் முரளிதரனை உள்ளே எடுத்து வருகிறார்கள்.

இருந்தாலும், உள்ளே இருக்கிற பாலிடிக்ஸ் அவரை அணியில் சேர்க்கமுடியாமல் வெளியே வைத்திருக்கிறது. முரளிதரனின் முழங்கை வித்தியாசமாக இருப்பதால், அவரை விளையாட அனுமதிக்க மறுக்கிறது கிரிக்கெட் வாரியம்.

தொடர்ந்து இதுமாதிரியான இன்னல்கள் முரளிதரன் மீது விழுகிறது. இது அனைத்தையும் தாண்டி, எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் கனவிலும் நினைக்க முடியாத 800 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்தி சாதனை படைத்தார் என்பதே படத்தின் மீதிக் கதை..

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம், அவரின் வாழ்க்கையைப் பற்றி யாரும் அறிந்திடாத பல விஷயங்களை இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். கதையை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.

முரளிதரன் போன்ற தோற்றம், அவரது உடல்வாகு மொழி, கையை சுழற்றுவது என பல முயற்சியை மிகவும் சிரமப்பட்டு தனது உழைப்பைக் கொடுத்திருக்கிறார் மதுர் மிட்டல். முரளிதரனின் வாழ்க்கையை இவரை தாண்டி வேறு யாரும் இவ்வளவு அழகாக கொடுத்திருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நரேன் நடித்து அசத்தியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் திரையரங்கில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.

படத்தின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம். நடித்த நடிகர்கள் அனைவருமே தமிழ் நடிகர்கள் என்பதால் நம்மால் படத்திற்குள் எளிதில் பயணப்பட முடிந்தது.

இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமே ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு மட்டுமே. பந்து சுழலுவதை அவ்வளவு துல்லியமாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார்.

800 – முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கண்ணாடி…

Facebook Comments

Related Articles

Back to top button