Spotlightசினிமா

பாராட்டு மழையில் “டாடா”… மகிழ்ச்சியில் கவின்!

லிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா நடித்திருக்கும் படம் தான் ‘டாடா’.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை மிக முக்கிய விஐபி-களுக்கு காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

படத்தினை பார்த்த அனைவரும் படக்குழுவினரை மிக வெகுவாக பாராட்டியுள்ளனர். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கவின்.

வரும் டிசம்பர் மாதம் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ படப் புகழ் ஹரீஷ், ‘வாழ்’ படப் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button