Spotlightசினிமா

தன் வினை தன்னைச் சுடும்… வாரிசு படத்துக்கு எமனாக வந்த ரஜினி படம்!

ளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளிவரும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எந்த பிரச்சனையில் இல்லாத நிலையில் தெலுங்கில் மிகப்பெரும் பிரச்சனை கிளம்பியுள்ளது.

அதாவது பண்டிகை நாள்களில் திரையரங்குகளில் வெளியாக நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஒரு தீர்மானம் தெலுங்கு சினிமாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.

அப்படி பார்த்தால் வாரிசு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட பட லிஸ்டில் இருப்பதால் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னனியில் இருப்பது என்ன என் ஆராய்ந்து பார்த்தால்…

2019ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் ஆந்திராவில் வெளியிட கூடாது என இப்பொழுது உள்ள வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு கோரிக்கை வைத்திருந்தார். அந்த பிரச்சினைதான் இப்பொழுது தில் ராஜுவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

பேட்ட திரைப்பட தெலுங்கு பதிப்பை பிரசன்ன குமார் தான் வாங்கி ஆந்திராவில் வெளியிட்டார். அவருக்கு எதிராக தான் தில் ராஜு அன்று அந்த கோரிக்கையை கூறினார். ஆனால் இப்பொழுது அதே பிரசன்னா குமார் தான் தெலுங்கு புரடியூசர் கவுன்சிலில் செக்ரட்டரியாக இருக்கிறாராம். அவர் தான் வாரிசு படத்தை வெளியிட விடாமல் தில் ராஜுவுக்கு எதிராக நிற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close