ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
காலா படத்தின் வசூல் சென்னையை பொறுத்தவரை திருப்திகரமாகவே உள்ளது. வார நாள்களில் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. முதல் பதினொரு தினங்களில் சென்னையில் காலாவின் வசூல் 10 கோடிகளை தாண்டியுள்ளது. இந்த வருடம் வெளியான எந்த திரைப்படத்தையும்விட காலாவின் வசூல் அதிகம்.
அதே நேரம் கபாலி, மெர்சல், பாகுபலி 2, விவேகம் படங்களுடன் ஒப்பிடுகையில் காலாவின் இரண்டாவது வார சென்னை வசூல் எப்படி உள்ளது?
காலா, கபாலி, பாகுபலி 2, மெர்சல், விவேகம் படங்களின் முதல்வார இறுதி வசூல்…
காலா – 765 காட்சிகளில் 4.26 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 6.70 கோடிகள்
கபாலி – 942 காட்சிகள் – 3.49 கோடிகள்
பாகுபலி 2 – 828 காட்சிகள் – 3.24 கோடிகள்
விவேகம் – 870 காட்சிகள் – 3.98 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 5.22 கோடிகள்
மெர்சல் – 678 காட்சிகள் – 3.90 கோடிகள். வியாழனையும் சேர்த்தால் 6.86 கோடிகள்.
முதல்வார ஓபனிங் வசூலை பொறுத்தவரை காலா பிற அனைத்துப் படங்களையும்விட மிக நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. வார நாள்களில் – அதாவது திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழனில் இந்தப் படங்களின் வசூலை பார்ப்போம்.
காலா – 668 காட்சிகள் – 2.02 கோடிகள்
கபாலி – 1056 காட்சிகள் – 2.55 கோடிகள்
பாகுபலி 2 – 988 காட்சிகள் – 3.08 கோடிகள்
விவேகம் – 608 காட்சிகள் – 1.82 கோடி
மெர்சல் – 772 காட்சிகள் – 2.74 கோடிகள்
வார நாள்களில் காலா காட்சிகள் வார இறுதியைவிட குறைவாக உள்ளன. வசூல் 2.02 கோடிகள். கபாலி வார நாள்களில் காட்சிகள் அதிகமாகியிருப்பதை பார்க்கிறோம். அதேபோல் வசூலும் காலாவைவிட அதிகம், 2.55 கோடிகள். பாகுபலி 2 காட்சிகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. வசூல், 3.08 கோடிகள். மெர்சல் காட்சிகள் அதிகரித்துள்ளன, வசூல் 2.74 கோடிகள். மேலே உள்ள படங்களில் விவேகம் தவிர்த்து பிற மூன்று படங்களின் வார நாள் வசூலைவிட காலா பின்தங்கியிருப்பதை பார்க்கிறோம்.
காலா மற்றும் பிற படங்களின் இரண்டாவது வார இறுதி வசூல் (வெள்ளி, சனி, ஞாயிறு).
காலா – 342 காட்சிகள் – 1.33 கோடி
கபாலி – 609 காட்சிகள் – 2.21 கோடிகள்
பாகுபலி 2 – 777 காட்சிகள் – 2.73 கோடிகள்
விவேகம் – 225 காட்சிகள் – 0.96 கோடிகள்
மெர்சல் – 453 காட்சிகள் – 2.35 கோடிகள்
காலா படத்தின் இரண்டாவது வார இறுதி காட்சிகள் வார நாள்களைவிட பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளன. அதேபோல் வசூலும் 1.33 கோடி என கீழிறங்கியுள்ளது. கபாலி காட்சிகளைவிட கிட்டத்தட்ட 50 சதவீதம் காட்சிகள் குறைவு. அதேபோல் வசூலும். கபாலி, பாகுபலி 2, மெர்சல் ஆகிய படங்களைவிட இரண்டாவது வார இறுதியில் காலா மிகக்குறைவாக வசூலித்திருப்பதை இது காட்டுகிறது.
இரண்டாவது வார இறுதி முடிவில் காலா மற்றும் பிற படங்களின் மொத்த சென்னை வசூல்.
காலா – 10.06 கோடிகள்
கபாலி – 8.26 கோடிகள்
பாகுபலி 2 – 9.06 கோடிகள்
விவேகம் – 8 கோடிகள்
மெர்சல் – 11.98 கோடிகள்
காலாவின் முதல்வார ஓபனிங் வசூல் மிக அதிகம் என்பதால் கபாலி, பாகுபலி 2 படங்களைவிட காலாவின் வசூல் அதிகம் உள்ளது. அதேநேரம், ஓபனிங் வசூலில் பின்தங்கிய மெர்சல் இரண்டாவது வார இறுதியில் காலாவை முந்தியிருப்பதையும் பார்க்கலாம்.
சென்னை பாக்ஸ் ஆபிஸில் 17 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து பாகுபலி 2 முதலிடத்திலும், சுமார் 15 கோடிகள் வசூலித்து மெர்சல் இரண்டாவது இடத்திலும், 11 கோடிகளுக்கு மேல் வசூலித்து கபாலி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதில் கபாலியை காலா எளிதாக முந்தும். மெர்சல், பாகுபலி 2 வசூலை எட்டிப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலே உள்ள புள்ளிவிவரங்களிலிருந்து, காலாவின் சென்னை வசூல் சிறப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது.