Spotlightசினிமா

உலக புகழ்பெற்ற மைக்டசனோடு சண்டை போட தயாரான விஜய் தேவரகொண்டா!!

யக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டாவின் முதல் பன்மொழி இந்திய திரைப்படம் “LIGER” .

இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த மைக் டைசன், LIGER படத்தில் இணைகிறார்.

Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா டிவிட்டர் வாயிலாக இது குறித்து கூறியது…

“நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, LIGER படத்தில் இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், MIKE TYSON. அவர்களை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.
#NamasteTYSON

LIGER படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்கள் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன்” சண்டை காட்சிகள், கோவாவில் தற்போது படமாகி கொண்டிருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில் பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை உருவாக்குகின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Facebook Comments

Related Articles

Back to top button