
கடந்த வருடம் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த படம் தான் ‘தாதா 87’.
அப்போது சுமார் 87’வது வயது நிரம்பிய சாருஹாசன், ’தாதா 87’ படத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இன்று தனது 90’வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சாருஹாசன். இந்நிலையில், தாதா 87 படத்தின் இயக்குனரான விஜய்ஸ்ரீ ஜி, தனது அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘தாதா 90’ படத்தை சாருஹாசனை வைத்து இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது, பப்ஜி படத்தினை இயக்கி வரும் விஜய்ஸ்ரீ ஜி, அடுத்த படமாக ‘தாதா 90’ படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதன், போஸ்டரையும் தற்போது விஜய்ஸ்ரீ ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வட மாநிலத்தில் இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான பால் தாக்கரே’வின் உருவம் போல் அமைத்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த போஸ்டர்.





