
தமிழக தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது.
விருப்ப மனு அறிவிப்பில் முந்திக் கொண்ட திமுக நேர்க்காணலிலும் முந்திக் கொண்டது. இன்று தொடங்கி 6ம் தேதிவரை நேர்க்காணல் நடத்த திமுக திட்டம்.
7ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடத்தி முடித்து 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே விடியலைத் தேடி, மக்கள் கிராம சபை, அதிமுகவை நிராகரிக்கிறோம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல பெயர்களில் தமிழகம் முழுதும் பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த திருப்தியில் இருக்கிறது திமுக.
திமுகவின் அதிரடிகள் கண்டு ஆளும் கட்சி பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கனவே அதிமுக EPS, OPS – சசிகலா, தினகரன் என பிரிந்து கிடக்கிறது.
போதாகுறைக்குக் கூட்டணிக் கட்சிகளின் அதிக தொகுதி நெருக்கடி என பலகட்ட டென்ஷனில் இருக்கிறது அதிமுக.
அதிமுகவின் ஆட்சி குறித்த அதிருப்தியும் பொது மக்களிடையே மிக அதிகமாக இருக்கிறது.
அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாமல் இருக்கும் திமுகவுக்கு இந்த முறை வாய்ப்புகள் அதிகம் என்பதால் உ.பி.க்கள் கோஷ்டி பூசல்களை மறந்து மிக உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்களாம்…