Spotlightவிமர்சனங்கள்

டான் – விமர்சனம் 3.5/5

யக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் தான் “டான்”. எஸ் கே ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்பதை பார்த்துவிடலாம்.

கதைப்படி,

தனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சமுத்திரக்கனிக்கு, ஆண் மகனாக வந்து பிறந்தார் சக்ரவர்த்தி (சிவகார்த்திகேயன்). அதை செய், இதை செய்யாதே என்று கண்டிப்புடனே தன் மகனை வளர்த்து வருகிறார். இவரின் கண்டிப்பால், தனது தந்தை தான் தனக்கு மிகப்பெரிய வில்லனாக நினைத்துக் கொள்கிறார். தன்னுள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து, அந்த திறமையால் வாழ்க்கயில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அப்பா சமுத்திரகனியின் வற்புறுத்தலால் இன்ஞ்சினியர் கல்லூரியில் சேர்கிறார். கல்லூரியில் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று, தனது நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கல்லூரி முதல்வராக வரும் எஸ் ஜே சூர்யா, கல்லூரியை கட்டுக்கோப்போடு (((பெண்களிடம் ஆண்கள் பேசுவது கூடாது உள்ளிட்ட))) நடத்தி வருகிறார்.

இதனால், சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யாவிற்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். பதிலுக்கு தன்னை மீறி எப்படி டிகிரி முடிப்பாய் என்று சிவகார்த்திகேயனுக்கு எஸ் ஜே சூர்யா சவால் விடுகிறார்.

இறுதியாக தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் கண்டுபிடித்தாரா ? டிகிரியை முடித்தாரா ? தந்தையை புரிந்து கொண்டாரா ? என்பதற்கான பதிலை இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கிறது இந்த “டான்”.

நாயகன் சிவகார்த்திகேயன் ஒட்டுமொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார். நடனம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டு செல்கிறார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியா சக்தியாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனுக்கு “டான்” திரைப்படம் ஒரு ஏணிப்படியாக இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம். இளமை கதாபாத்திரத்திலும் தன்னை கதாபாத்திரத்தோடு ஒன்ற வைத்து நடித்து அசத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் குடும்ப ரசிகர்களை கவரும்படியான காட்சிகளில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிக்கு எழுந்து நின்றே கைதட்டல் கொடுக்கலாம்.

நாயகி ப்ரியங்கா மோகன் அழகு தேவதையாக வருகிறார். டாக்டர், எதற்கும் துணிந்தவன், இப்போது டான் என அடுத்தடுத்த படங்களில் தமிழ் இளைஞர்களின் இதயத்தில் பட்டா போட்டு குடியேறிவிட்டார்…

மெர்சல், மாநாடு படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவிற்கு நடிப்பிற்கு தீணி போடும் படமாக அமைந்துள்ளது “டான்”. ஒவ்வொரு ப்ரேமிலும் அந்த கதாபாத்திரத்திற்கான மெனக்கெடலை கொடுத்து ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

சிவாங்கி, பாலசரவணன், மிர்ச்சி விஜய் என உடன் பயணித்த அனைவரும் லிமிட்டாக நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள். சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடாமல் போய்விட்டது. முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் சிங்கம்புலி இவர்களின் காட்சிகள் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருந்தது.

இரண்டாம் பாதியில் எமோஷ்னல் காட்சிகளில் நடித்து பலரின் கண்களை குளமாக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

இளைஞர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட், குடும்ப ரசிகர்களுக்கும் எமோஷன், என படத்தில் இரண்டையும் கலந்து கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.

முதல் பாதியில் சற்று போரடிக்கும் ஒரு சில காட்சிகளை நீக்கி, நேரத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் படுஜோராக பயணித்திருக்கும்…

படத்திற்கு பெரும் பலம் என்றால் அது அனிருத்தின் இசை தான். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே மிகப்பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில், பின்னணி இசையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார். பல இடங்களில் பல தனித்துவமான இசையும் கொடுத்திருக்கிறார் அனிருத்.

கே எம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு கலர் ஃபுல்லாக காட்சி கொடுத்துள்ளது. எந்த இடத்திலும் சலிப்படைய வைக்காமல், காட்சிக்கு காட்சி புதுமையை கொடுத்திருக்கிறார்.

டான் – குடும்பத்தோடு ஒருமுறை கண்டுரசிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button