Uncategorized

லோகேஷ் கனகராஜின் G Squad – Mythri Movie Makers கூட்டணியில் புதிய படம்; நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜின் G Squad நிறுவனமும், இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Mythri Movie Makers நிறுவனமும் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரித்து வருகின்றன. பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘Bomb’ படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டிராமா திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஹரிஹரன் ராஜூ கதை எழுதியுள்ளார். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தையும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

G Squad சார்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் Mythri Movie Makers சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் அறிவிப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் – Mythri Movie Makers கூட்டணி, விஷால் வெங்கட் இயக்கம் மற்றும் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பு என புதிய கூட்டணியில் உருவாகும் இப்படம் கவனம் பெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button