
இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கோஸ்டி. காமெடி கதைக்களத்திற்கு பெயர் போன இயக்குனரான கல்யாண் இயக்கத்தில் இப்படம் எந்தவித ப்ரொமோஷனும் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.
கதைப்படி,
காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் காஜல் அகவர்வால், ஜெயிலில் இருந்து தப்பியோடிய மிகப்பெரும் தாதாவான கே எஸ் ரவிக்குமாரை தேடி அலைகிறார். தன்னை ஜெயிலில் தள்ளிய 5 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை கொல்வதற்கு செல்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
இந்த சூழலில் திருடர்களாக வரும் யோகிபாபு, ஜெகன் மற்றும் கிங்க்ஸ்லி மூவரும் விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்த ஒரு வாயுவை சுவாசிக்க.. மூவரும் மனநலம் பாதிக்கப்படுகிறார்.
கே எஸ் ரவிக்குமாரை துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக தவறுதலாக ஜெய்யை சுட்டுவிடுகிறார் காஜல் அகர்வால்.
ஜெய்யின் உடலை மறைத்து வைக்கும் காஜல் அகர்வால், சில அமானுஷ்யத்தால் கஷ்டப்படுகிறார். தொடர்ந்து அமானுஷ்யம் காஜல் அகர்வாலை தொந்தரவு செய்கிறது.
யார் அந்த அமானுஷ்யம்.? ஜெய்யின் கதாபாத்திரம் என்ன..? அமானுஷ்யத்தின் பிடியில் இருந்து காஜல் தப்பித்தாரா.? என்பதே படத்தின் கதை
படத்தில் நடித்த எந்தவொரு காட்சியையும் பெரிதாக ரசிக்க முடியாமல் இருக்கிறது. காட்சியமைப்புகள் அனைத்தும் செயற்கையாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல்..
காமெடி என்கின்ற பெயரில் ஒரு சோதனைக்கூத்து தான் நடத்தி வைத்திருக்கிறார் இயக்குனர்.
இதில் செண்டிமெண்ட் காட்சிக்காக ஜெய் வேற இதில் நடித்திருக்கிறார். அதுவும் கதையோடு ஒட்டாமல் ஓரமாக சென்று விடுகிறது.
யோகிபாபுவின் காமெடிக் கூத்துகள் ஒன்று கூட சிரிப்பைக் கொண்டு வரவில்லை.
ஒளிப்பதிவு ஓகே ரகமாக இருந்தாலும், பின்னணி இசை எதிலும் ரசனை இல்லை…
மொத்தத்தில் கோஸ்டி – படம் பார்த்தவர்கள் கோமாவிற்கு செல்லாத நிலை தான்..