Spotlightதமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு..!!

நிவர் புயலின் எதிரொலியாக சென்னை மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து, ஏரியில் இருந்து படிப்படியாக நீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக 7000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

நிவர் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து ஏரிக்கு நீரின் வரத்தும் குறைந்தது. இதனால், ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கபட்டது.

தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக இருக்கிறது.

ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button