
கிரிஷ் G இசையமைப்பில், கானா பாலா பாடல் வரிகள் மற்றும் குரலில் இயக்குநர் தமீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மொக்க காதல் பாடல் இளைஞர்களின் காதல் கீதமாக இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
காதல் தோல்வியில் உள்ள ஒருவன் தன் நண்பணுடன் சென்று அவனது மாமாவான கானா பாலாவை சந்திக்கிறான். அவர் அவனை ஆறுதல் படுத்த பாடும் பாடலாக இப்பாடல் திரையில் விரிகிறது. மிக அழகான விஷுவல், காதல் வலியை சொல்லும் வரிகள், கானா பாலாவின் மயக்கும் குரலில், இசையமைப்பாளர் கிரிஷின் அற்புத இசையமைப்பில் மிக அட்டகாசமான பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.
தமிழ் சுயாதீன இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் கிரிஷ் G. முன்னதாக ஏ ஆர் ரஹ்மானின் நெஞ்சினிலே பாடலை வைத்து இவர் செய்த ரீபெர்த் வெர்ஷன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பல மில்லியன் பார்வைகளை இப்பாடல் குவித்தது குறிப்பிடதக்கது.
தற்போது காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ள மொக்க காதல் பாடல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.



