
குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
கெளதம் கார்த்திக் வைத்து தேவராட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் கெளதம் கார்த்திக்கை வைத்து முத்தையா அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்கவிருக்கிறார். மேலும், நாயகியாக லெட்சுமிமேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஓரிரு நாட்களில் அதுவும் முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments




