
எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ளது ‘மிஸ்டர் லோக்கல்’. வரும் வெள்ளியன்று இப்படம் பிரம்மாண்ட வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க சக்திவேல் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேல் இப்படத்தை வெளியிடுகிறார்.
ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகளை கவரக்கூடிய நடிப்பை சிவகார்த்திகேயன் இந்த ட்ரெய்லரில் வெளிப்படுத்தியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும்படியாக இப்படத்தில் களம் இறங்கி தனது நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.





