Spotlightவிளையாட்டு

நீங்களே இத பார்த்துட்டு சொல்லுங்க டோனி அவுட்டா இல்லையா..??

ன்றைய பெரும் விவாத பொருளாக மாறியிருப்பது டோனி அவுட்டா இல்லையா என்பது தான்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டோனியின் ரன் அவுட் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் பைனலில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முக்கியமான நேரத்தில் ரன் அவுட் கொடுக்கப்பட்டது.

தோனி, 2 ரன்கள் எடுத்து இருந்தபோது, 2 ரன்கள் ஓடும் முயற்சியின்போது, ரன் அவுட்டானார். தோனி கிரீசில் பேட்டை வைத்த தருணமும், பந்து ஸ்டெம்பில் பட்ட தருணமும் ஒன்றாக இருந்தது போல 3வது நடுவர் ரீப்ளேயில் பார்த்தபோது தெரியவந்தது.

பக்கவாட்டு கோணத்தில் இருந்து பார்த்தபோது, தோனி பேட் க்ரீஸ் மீது இருந்தது. சற்று உள்ளே இருந்தாலும் சந்தேகம் வந்திருக்காது. ஆனால் இது சந்தேகப்படும்படியாக இருந்ததால், 3வது நடுவர் கோணத்தை மாற்றி பார்த்தார். அதாவது பவுலர் திசையிலிருந்து பார்த்தபோது, கிரீசை விட்டு பேட் வெளியே இருந்ததை போல தெரிந்தது. எனவே அவுட் கொடுத்தார்.

ஆனால், இந்த கோணத்தை பார்த்து அவுட் கொடுப்பது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்த்த கோணம்தான் சரியானது. இந்த பக்கம் இருந்து பார்த்தால் பேட் தொலைவில் இருப்பது போலத்தான் தெரியும். அது காட்சிப்பிழை. இதை ஏன் நடுவர் கருத்தில் எடுத்தார்.

இதுபோன்ற கோணத்தை ஸ்டெம்ப்பில் பந்து படுவதை பக்கவாட்டில் இருந்து பார்க்க முடியாவிட்டால்தான் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால் தோனி ரன் அவுட் விஷயத்தில் பக்கவாட்டு கோணம் பக்காவாக ஸ்டெம்ப்பு மற்றும் க்ரீசை காட்டுகிறதே என்ற கேள்விகள் எழுகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button