Spotlightசினிமா

விளம்பரத்தில் உச்சம் தொடும் லைகாவின் “இந்தியன் 2”

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “இந்தியன் 2”.

இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படமானது வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்காக படக்குழுவினர் மாநிலங்கள் கடந்து நாடு நாடாக சென்று ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.

இப்படத்தினை உலகம் முழுக்க கொண்டு செல்ல படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், துபாயில் மிக பிரபலமான Dubai Skies என்ற வானில் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் இந்தியன் 2 படத்தின் பேனரை வானில் பறக்கவிட்டனர்.

இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button