விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பெங்களூரு!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் நடந்த 11வது லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதலில் ‘பேட்’ செய்த பஞ்சாப் அணி, 19.2 ஓவரில், 155 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்த அணிக்கு லோகேஷ் ராகுல் (47), கேப்டன் அஷ்வின் (33), கருண் நாயர் (29) கைகொடுத்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, 19.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணிக்கு டிவிலியர்ஸ் (57), குயின்டன் டி காக் (45) கைகொடுத்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button