Spotlightசினிமா

தல அஜித்திற்கு மனைவியாக நயன்தாரா… விஸ்வாசம் அப்டேட்!

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’. தொடர்ந்து நான்காவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரிலீசாகி வைரலானது.

அஜித்தும் நயன்தாராவும் இப்படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் படத்தில் இருவருக்கு திருமணம் ஆகும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.

விஸ்வாசம் படம் குறித்த இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button