Spotlightதமிழ்நாடு

எங்கேயும் போகாதீங்க.. முதல்வர் பேசுறார்ல… மக்களை சிறைப்பிடித்த அதிமுக-வினர்!

லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக நடத்தும் கூட்டங்களில் பொதுவாக மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் கூட்டங்கள் இல்லாமல், பொதுக்கூட்டத்தில் காற்று வீசுகிறது என்ற குற்றச்சாட்டும் அதிமுக மீது அதிகமாகவே உள்ளது.

இதனால் தற்போது அதிமுக சார்பாக இதற்காக புதிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார்கள். கூட்டம் குறையாமல் இருக்க அதிமுகவினர் மனித சங்கிலி அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

முதல்வர் பேசும் போது அங்கிருந்து வெளியேறும் மக்களை அதிமுகவினர் மனித சங்கிலி அமைத்து தடுக்கிறார்கள். மக்கள் எங்கும் செல்ல கூடாது, முதல்வர் பேசி முடிக்கும் வரை மக்கள் எங்கும் செல்ல கூடாது. மேலிடத்து உத்தரவு இதுதான், அதனால் பேச்சை இருந்து கேட்டுவிட்டு செல்லுங்கள் என்று அதிமுகவினர் மக்களை மனித சங்கிலிக்குள் அடைத்து விடுகின்றனர்.

 

https://twitter.com/krajesh4uu/status/1112542694373355520

Facebook Comments

Related Articles

Back to top button