
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
சமீபத்தில் மும்பையில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தர்பார் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.

தர்பார் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். ஒரே விமானத்தில் இருவரும் அருகருகே அமர்ந்து பயணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Facebook Comments





