தமிழ்நாடு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு களத்திற்கு நானும் வருவேன் – கமல்!

ஸ்டெர்லை ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று தூத்துக்குடியில் முழு கடையடைப்பு போராட்டமும், மாலை கண்டன பொதுக்கூட்டத்தினையும் நடத்தினர்.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை காட்டினர். இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ‘ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close