Spotlightசினிமா

”செம்பி” வெற்றியைத் தொடர்ந்து அஷ்வின் நடிக்கும் அடுத்த படம்

ருள்நிதி நடிப்பில் உருவான ‘தேஜாவு’ திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும் தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான ‘ரிபீட்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டுடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இனைந்து தயாரிக்கிறது.

இது குறித்து இன்று அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button