Spotlightசினிமா

இயக்குநர் சசிகுமார் வெளியிட்ட ‘ஐயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் விஜயன் ஈஸ்வரன் வழங்கும், இயக்குநர் நா. வசந்த் எழுதி இயக்கியுள்ள ‘ஐயம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள போஸ்டரில், கையில் டார்ச் லைட்டுடன் நிற்கும் நாயகனைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. மர்மமான பின்னணி, தீப்பிழம்புகள், பதற்றமான முகபாவனைகள் என திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதைக்களத்தை உணர்த்தும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு எம்.கே. கமலநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெகதீஷ் என். படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சசிகுமார் வெளியிட்டுள்ள ‘ஐயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து, படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button