இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகியுள்ளது ‘கடைக்குட்டி சிங்கம்’. படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தினை 2டி நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சத்யராஜ், சூரி, பானுப்பிரியா என பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விவசாயத்தின் போற்றுதலையும், விவசாயிகளின் பெருமையையும் தூக்கி நிறுத்தும்படியான குடும்ப பாங்கான படமாக இப்படம் உருவாகியுள்ளது.
முழுக்க முழுக்க காமெடி, காதல், பாசம், நேசம், பகை என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருப்பதால் ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments