
தமிழ் சினிமாவில் பல கதைகளை இணைத்து ஒரு படமாக வெளிவருவது தற்போது ட்ரெண்டிங்கில் ஒன்றாக இருக்கிறது.. அந்த வகையில் ஆந்தலாஜி மாதிரி வந்த படங்கள் இதுவரை பெரிதாக யாரையும் கவரவில்லை என்பது தான் நிசப்தம்..
அந்த வகையில் ஆறு கதைகளை உள்ளடக்கிய கசடதபற எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்கலாம்…
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முதல் படத்திலே உச்சம் தொட்டவர் இயக்குனர் சிம்பு தேவன். அடுத்ததாக விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கினார்.. இப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சற்று ப்ரேக் எடுத்துக் கொண்டார் இயக்குனர்.
இந்நிலையில் தற்போது ‘கசடதபற’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்..
முதல் கதை
பிரேம் ஜி & ரெஜினாவின் காதல் ஓட்டம்,
இரண்டாம் கதை
சம்பத் & சாந்தனுவின் அப்பா மகன் ஓட்டம்,
மூன்றாவதாக
வாழ்க்கையில் எப்படியாவது பெரிய கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடும் ஹரீஷ் கல்யாணின் தந்திர ஓட்டம்,
நான்காவதாக
தன்னிடம் வேலை பார்த்தவரின் மகன் சுந்தீப் கிஷன் தனக்கு இணையாக போலீஸ் பதவியில் அமர்ந்து சரிக்கு சரியாக பேசிக் கொண்டிருப்பதை பொறுக்காத சுப்பு பஞ்சு, அவரை கொல்ல திட்டம் தீட்டும் செயல்…
ஐந்தாவதாக
கணவனை இழந்த விஜயலக்ஷமி, தன் ஒரு மகனை கஷ்டபட்டு உழைத்து வளர்க்க வேண்டும் என்று அயராது உழைக்கிறார்.. மகனுக்கு திடீரென உடல்நிலை மோசமாக, அதன் பிறகு தாயாக விஜயலக்ஷ்மி படும் இன்னல்கள்..
ஆறாவதாக..
தன் முதலாளி மீது கொண்ட விசுவாசத்திற்காக செய்யாத ஒரு குற்றத்தை ஏற்றுக் கொண்டு தன் மனைவி, பிள்ளைகளை விட்டு தூக்குத் தண்டனை கைதியாகிறார் வெங்கட் பிரபு. மரணத்தின் விளிம்பில் இருக்கும் வெகட் பிரபுவின் மன ஓட்டம்…
ஆறு கதைகளையும் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார் சிம்பு தேவன்.. ஒவ்வொரு கதையும் அடுத்த கதையை தொடும் போது சின்னதான ஒரு இணைப்பை கொடுத்திருக்கிறார்.. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான எமோஷ்னலை கொடுத்து பாராட்டினை பெறுகிறார் இயக்குனர் சிம்பு தேவன்.
பிரேம் ஜி , ப்ரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன் , ரெஜினா, சாந்தனு, ஹரீஷ் கல்யாண், விஜயலக்ஷ்மி, வெங்கட் பிரபு, சிஜா ரோஸ், வித்யா ப்ரதீப் , சம்பத் என கதையில் நடித்த ஒவ்வொருவரும் தனிக் கவனம் ஈர்த்துள்ளனர்.. அனைவரிடத்திலும் நேர்தியாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்…
பிரேன் ஜி, வெங்கட் பிரபு முதன் முதலாக அனைவரும் ரசிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்,
விஜயலக்ஷ்மி தன் கேர்க்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்..
சாந்தனுவின் நடிப்பு நச்…
ஒவ்வொரு கதையிலும் வைத்த ட்விஸ்ட் படத்திற்கு பெரும் பலம்…
ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் அனைவருமே கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம் ஜி, சாம் சி எஸ் , ஷான் ரோல்டன் அனைவரும் பின்னனி இசையில் மிரள வைத்திருக்கிறார்கள்…..
ஆறு கதைகளும் ஆறு உணர்வுகள்..
இரண்டாம் பாதியில் சின்னதாக தொய்வு இருந்தாலும் அதையும் சரி செய்து கொண்டு செல்கிறார் இயக்குனர் ..
கசடபதபற – கனக்கச்சிதம்