SpotlightUncategorizedசினிமா

’என் இனமடா நீ ராசா..’ – கவினுக்கு ஆறுதல் கூறும் கஸ்தூரி!

விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் பாத்திமா பாபு, லாஸ்லியா,நடிகை சாக்ஷி அகர்வால், ஜாங்கிரி மதுமிதா, சரவணன் மீனாட்சி கவின், அபிராமி ஐயர், பருத்தி வீரன் சித்தப்பு சரவணன், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், பாடகர் மோகன் வைத்யா, சாண்டி மாஸ்டர்,மாடல் தர்சன், மலேசிய பாடகர் முகின் ராவ், ரேஷ்மா ஆகியோர் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்.

அனைவரும் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பல சோகங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அப்போது நடிகர் கவின், ‘கஷ்டப்படும்போது சொந்தகாரங்க ஒண்ணும் செய்யல… எல்லாமே நண்பர்கள்தான்.’ என்று கூறியுள்ளார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘
என் இனமடா நீ ராசா. உதவி செய்யலேன்னா கூட பரவாயில்ல, துரோகம் செய்யாம விட்டார்களே, நீ கொடுத்துவச்சவன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் கவினுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு ஆதரவு பெருகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button