Spotlightசினிமாவிமர்சனங்கள்

கெழப்பய – விமர்சனம் 3.25/5

இயக்கம்: யாழ் குணசேகரன்

நடிகர்: கதிரேச குமார்,

இசை: கெபி

ஒளிப்பதிவு: அஜித்குமார்

எடிட்டர்: ராஜேஷ்

கதைப்படி,

சுமார் 65 முதல் 70வயது மதிக்கத்தக்க கதையின் நாயகன் கதிரேச குமார், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக இருந்து வருகிறார். பணிமுடிந்து தனது இரு சக்கர மிதிவண்டியில் வீடு திரும்பும் போது, அவ்வழியாக ஒரு கார் ஒன்று வருகிறது.

அது கிராமபுற ரோடு என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். அந்த காரில் கர்ப்பிணி பெண் ஒருவரோடு சேர்த்து 5 பேர் அந்த காரில் வருகிறார்கள். வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார் அந்த கார் டிரைவர்.

ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் கதிரேச குமார். காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி கதிரேச குமாரிடம் ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்.

எதற்கும் செவி சாய்க்காத கதிரேச குமார், நடுவழியிலேயே சென்று கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள்.

அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

எதற்காக அந்த காரை தடுக்கிறார்.?? அந்த காருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

இப்படத்தின் தயாரிப்பாளரான கதிரேசகுமார், இக்கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இக்கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார். காரில் கர்ப்பிணி இருக்கிறார் ஆனால், இவர் எதற்காக வழி கொடுக்காமல் இருக்கிறார் என்று அவர் மீது நமக்கும் கோபம் வருகிறது. ஆனால், அவ்வளவு அடி வாங்கியும், அந்த காரை விடவில்லையே அப்படியென்றால் ஏதோ ஒரு சங்கதி இருக்கிறது என்று புரிய வைத்து, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது இரக்கம் ஏற்பட வைத்துவிடுகிறார்.

படம் முழுவதுமே பேசாமலேயே நகர்த்திச் செல்கிறார். இந்த வயதில் நட்ட நடு காடாக இருக்கும் அந்த இடத்தில், சுள்ளென்று அடிக்கும் வெயிலில் இந்த வயதில் கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் நடித்த கதிரேச குமாருக்கு வாழ்த்துகள்.

காரில் வந்த நபர்களும், ஒரு சாமானியன் காரில் வந்து, ஒருவர் வழி விடவில்லை என்றால் எப்படி கோபப்படுவார்களோ, அப்படியாக தங்களது கோபத்தை வெளிக்காட்டும் இடத்தில் இயக்குனரின் இயக்கத்திறமை நன்றாகவே தெரிகிறது. ஊர் விஏஓ’வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

நடிகர்களின் தேர்வும் நச்சென்று இருக்கிறது. வயதானவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணுபவர்களுக்கு இப்படம் ஒரு படிப்பினையாக கூட அமையலாம். தங்களால் இயன்றதை அவர்களாலும் செய்ய முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த கெழப்பய..

முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுவது படத்திற்கு சற்று சரிவாகத் தான் தெரிகிறது. இருந்தாலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இம்மாதிரியான சினிமாக்களை தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

அஜித்குமாரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பாராட்டும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருந்தாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை கொடுத்திருந்திருக்கலாம்.

கெபியின் இசையில், படத்தின் பின்னணி இசை யுனிக்’காக இருந்தது பெரும் பலம். எங்கு சைலன்ஸ் தேவையோ அங்கு அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் கெபி.

ராஜேஷின் எடிட்டிங் நறுக்…

மொத்தத்தில்,

கெழப்பய – வென்று காட்டியிருக்கிறார்..

Facebook Comments

Related Articles

Back to top button