Spotlightசினிமா

LK அக்ஷய் குமாரின் அடுத்த படம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!

‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார், அடுத்ததாக புதிய கிரைம் டிராமா திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வரும் LK அக்ஷய் குமாரின் திரைப்பயணத்தில், இந்தப் படம் மற்றொரு புதிய முயற்சியாக உருவாகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் விஷ்ணு அமரன் இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னணி இயக்குநர் H. வினோத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

அந்த அனுபவத்தைத் தொடர்ந்து, கிரைம் டிராமா கதைக்களத்துடன் தனது முதல் படத்தை இயக்குகிறார் விஷ்ணு அமரன்.

படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தின் ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் R, ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன், கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கின்றனர்.

விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் சந்தோஷ் வடிவமைக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அருண் K பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தில் வெவ்வேறு களங்களும் மாறுபட்ட கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெறவுள்ளன.

‘சிறை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற LK அக்ஷய் குமார், அதைத் தொடர்ந்து ‘ராவடி’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் வீடியோக்களில் கல்லூரி மாணவராக வித்தியாசமான தோற்றத்தில் அவர் இடம்பெற்றது கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘ராவடி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகும் புதிய கிரைம் டிராமாவில் LK அக்ஷய் குமார் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button