
கனடாவில் உள்ள எட்டு வயதான சிறுவன் டெரெக் ப்ரூ. இவருக்கு மார்பு பகுதியில் பெரிய மச்சம் ஒன்று இருந்துள்ளது.
தனக்கு பெரிதாக மச்சம் இருப்பதை எண்ணி தினசரி மனம் நொந்துள்ளான் ‘டெரெக் ப்ரூ’. மகனின் மன அழுத்தத்தை போக்க மகனுக்கு இருப்பதை போன்றே தனது உடலிலும் அதே இடத்தில் பச்சை குத்தியுள்ளார் டெரெக்கின் தந்தை.
இதுகுறித்து டெரெக் ப்ரூவின் தந்தை கூறும் போது, ‘எனது மகனுக்கு சிறு வயதில் இருந்தே மச்சம் இருக்கிறது. இப்போது பெரியவனாக ஆனதும், நீச்சல் குளத்தில் குளிக்கும் போது சட்டை அணிந்து கொண்டே குளிக்கிறான். அதுமட்டுமல்லாமல், மச்சம் இருப்பதை ஒரு குறையாகவே எண்ணினா. அவனது மன அழுத்தத்தை போக்கவே நானும் பச்சை குத்திக் கொண்டேன்.’ என்றார்.
இந்த பச்சை குத்தி முடிப்பதற்கு சுமார் 30 மணி நேரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகனுக்காக இதை செய்தது ஒரு வகையான சுகமான வலிதான் என்று டெரெக்கின் தந்தை கூறியுள்ளார்.





