Spotlightசினிமா

அப்போது திருப்பூர் தொழிலதிபர்! இப்போது சினிமாவில் வில்லன்!!

தினமும் வாய்ப்பு தேடினாலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விட மாட்டோமா என ஏங்குபவர்கள் ஏராளம். அப்படியிருக்க சிலருக்கு அதிர்ஷ்டம் தானாக கதவைத் தட்டும். இதில் ரெண்டும் கலந்த கலவை கார்த்திக் சிவக்குமார். திருப்பூர் பின்னலாடை நகரத்தில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட்டில் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும்போது, அடித்தது அதிர்ஷ்டம்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு தம்மாத்துண்டு காட்சியில் வந்து போனவருக்கு சினிமா மீது பெருங்காதல் ஏற்பட்டது. தொடர்ந்த தேடுதலில் அடித்தது ஜாக்பாட். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனரின் கண்ணை நம்பாதே, தொட்ரா இயக்குனர் மதுராஜ் இயக்கத்தில் அடுத்த படம், ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் நெகட்டிவ் ரோல், என தொடர்ந்து வில்லன் வேடத்தில் ஆப்பர்ச்சூனிட்டி கன்டினியூ ஆகிறது.

“நெகட்டிவ் ரோல், கேரக்டர் ரோல், காமெடி ரோல் எது கிடைத்தாலும் பர்ஃபாமென்ஸ் பண்ண ரெடியா இருக்கேன். ஒரே ஒரு சீன் என்றாலும் மக்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் கேரக்டரா இருந்தா  பர்ஃபாமென்ஸ் பண்ண நான் ரெடி” என்கிறார் கார்த்திக் சிவக்குமார்.

Facebook Comments

Related Articles

Back to top button