
மெளனகுரு படத்தின் இயக்குனரான சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி வருகிறது ‘மகாமுனி’. இப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது. மிகவும் அதிரடியான இசையுடன் ஆர்யாவின் மிரட்டல் பார்வையில் இந்த டீசர் வெளியாகி அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியாகி 24 மணி நேரத்தில் இதுவரை 14 லட்சம் பார்வையாளர்களால் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரெண்டிங்கில் 2 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது.
இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். எஸ் எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
Facebook Comments




