Spotlightசினிமாதமிழ்நாடு

தூத்துக்குடியில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. ஆக்‌ஷனுக்கு தயாராகும் நிர்வாகம்!

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்து வருகிறது.

தூத்துக்குடியில் இதுவரை சுமார் 367 பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 207 பேர் தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பழக்கடை வைத்திருப்பவர், மின்சாதனை கடை வைத்திருப்பவர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் நிலவுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button