
நாயகன் ராஜ்குமார் ராவ், கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டி போராடுகிறார். ஆனால், அவருக்கு தோல்வி மட்டுமே கிடைக்கிறது. சாதிக்க முடியாததால் பல அவமானங்களை அவர் கடந்து செல்ல வேண்டியதாகியிருக்கிறது.
அவரது தந்தை கடையான ஸ்போர்ட்ஸ் ஷாப் ஒன்றை கவனித்து வருகிறார் ராஜ்குமார். வாழ்க்கையே வெறுத்து ஒரு வாழ்வை வாழ்ந்து வரும் ராஜ்குமாருக்கு ஜான்வி கபூருடன் திருமணம் நடக்கிறது. தன்னால் ஒரு பிரபலம் ஆக முடியவில்லையே என்று நினைத்து வருந்துகிறார் ராஜ்குமார்.
மருத்துவரான ஜான்வி, ராஜ்குமாரை பலப்படுத்துகிறார். மீண்டும் கிரிக்கெட் விளையாடும்படி கூறுகிறார். ராஜ்குமாரால் அதில் நிலைக்க முடியவில்லை. இந்நிலையில், மனைவி ஜான்வி கபூர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து ஆச்சர்யத்தில் மலைத்து போகிறார் ராஜ்குமார்.
அவரை ட்ரெய்னிங் செய்து மகளிர் கிரிக்கெட்டில் சேர்த்து விளையாட வைத்து அதில் தான் பிரபலமாக முடிவு செய்கிறார். முறையாக ஜான்வி கபூருக்கு பயிற்சி கொடுக்கிறார் ராஜ்குமார்.
ஜான்வி கபூர் அடுத்தடுத்த கிரிக்கெட்டில் விளையாடி சாதனை படைக்கிறார். இதனால் ராஜ்குமார் பிரபலமாக முடியவில்லை.
சோதனையின் உச்சத்திற்கே செல்லும் ராஜ்குமார் ஜான்வி கபூரை வெறுக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதை மொத்தத்தையும் தனி ஒரு ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஜான்வி கபூர். அழகிலும் நடிப்பிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறார். ராஜ்குமார் மற்றும் ஜான்வி இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
ராஜ்குமாரின் நடிப்பும் பெரிதாக பாராட்டும்படியாக இருந்தது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரு தூண்களாக வந்து நிற்கிறது. படத்தின் கதை யூனிக்காக இருந்தது படத்தின் கதை சுவாரஸ்யத்தை ஏற்றிக் கொடுத்தது.
இந்த வருடத்தின் சிறந்த படத்தின் டாப் 10 லிஸ்டில் இப்படமும் நிச்சயம் இணையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Director: SHARAN SHARMA
Artist: RAJKUMMAR RAO, JANHVI KAPOOR , KUMUD MISHRA , ZARINA WAHAB , RAJESH SHARMA , ARJIT TANEJA , PURNENDU BHATTACHARYA ,YAMINI DAS
WRITTEN BY: NIKHIL MEHROTRA, SHARAN SHARMA
DIRECTOR OF PHOTOGRAPHY : ANAY OM GOSWAMY (ISC)
EDITOR: NITIN BAID
MUSIC SUPERVISOR: AZEEM DAYANI
PRODUCTION DESIGNER: SHARANYA MENON
MUSIC: AADESH SHRIVASTAVA, VISHAL MISHRA, TANISHK BAGCHI, JAANI, ACHINT & YUVA
HUNNY & BUNNY, DHRRUV DHALLA





