
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபல மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலினிஸ்டுமான பாலபாஸ்கர். இவர் கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுத்திரும்பும் போது பள்ளிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
குழந்தை இறந்த சம்பவம் கேரள மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தையுடன் பாலபாஸ்கர் இருக்கும் புகைபடங்கள் அதிகமாக சமூகவலைதளங்களில் பகிரபட்டு வருகின்றன.
Facebook Comments





