Spotlightசினிமா

ராட்சசன் படத்திற்காக ஜிப்ரானுக்கு ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது!!

‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைக்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் பகிரப்பட்டு அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

‘ராட்சசன்’ படத்துக்காக பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருது ஜிப்ரானுக்கு கிடைத்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாவின் ஒர் அங்கமான ஃபுஸன் சர்வதேச திரைப்பட விழா வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன. இந்தக் கடும் போட்டியில் ஜிப்ரன் இசையமைத்த ‘ராட்சசன்’ படம் 2019ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருதை வென்றிருக்கிறது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரிக்காக ஜி.டில்லிபாபு தயாரித்த ‘ராட்சசன்’ படம், உளவியல் திரில்லர் வகை படமாகும். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் சரவணன் பிரதான வேடங்களில் நடித்திருந்த இப்படம் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றதுடன், விமர்சன ரீதியிலும் பாராட்டுதல்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button